இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் 66 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவையிட்டு தலைமையகத்தில் புதிய மண்டபம் திறந்து வைப்பு
15th November 2017
இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து தலைமையக வளாகத்தினுள் புதிய மண்டபம் ஒன்றையும் (11) ஆம் திகதி மாலை கண்டியன் பௌத்த கலாச்சார நடன வரவேற்புடன் திறந்து வைத்தார்.
பொறியியலாளர் படையணியின் 66 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு கடந்த (9) ஆம் திகதி பனாகொடை பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது.
பின்பு அனைத்து சமய தலைவர்களினதும் ஆசீர்வாத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌண அஞ்சலி செலுத்தப்பட்டு தலைமையக வளாகத்தினுள் உள்ள நினைவு துாபிகளுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவு துாபிகளுக்கு இராணுவ தளபதி, பொறிமுறை படையணியின் படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மலர் அஞ்சலிகளை செலுத்தி கௌரவித்தனர்.
இறுதியாக (11) ஆம் திகதி இரவு தலைமையகத்தில் பௌத்த மத ஆசீர்வாத வழிபாடுகளும் இடம்பெற்றன.
|