உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு விழிப்புணர்வு

15th November 2017

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ‘ஆரோக்கிய இராணுவம்‘ எனும் கருத்திட்டத்தன் கீழ் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு (15) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வின் ஊடாக சுகாதார பரிசோதனை மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் இரத்தத்துடன் சீனி கலந்து உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விரிவுரைகள் இடம்பெற்றன.

‘ஆரோக்கிய இராணுவம்‘ கருத்திட்த்தின் பணிப்பாளர் பிரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன,லெப்டினன்ட் கேர்ணல் டீ.எஸ். ஹெய்யன்துடுவ,லெப்டினன்ட் கேர்ணல் கே.டீ.என்.யூ. ஜயசிங்க மற்றும் மேஜர் ஆர்.பி.எம் பிரசங்க போன்ற அதிகாரிகள் இந்த விழிப்புணர்வில் விரிவுரைகளை நடாத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் இராணுவத்திலுள்ள அனைவருக்கும் நீரிழிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு இராணுவ சுகாதார சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்களது ஆலோசனைக்கமைய ‘ஆரோக்கிய இராணுவம்‘ கருத்திட்டத்தின் பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்றது.

|