பல்கலைக்கழக மாணவர்கள் காலாட் படையணியின் நுாதனசாலைக்கு விஜயம்

15th November 2017

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதானி பேராசிரியர் அலெக்ஷாண்டர் கபுகொடுவையின் தலைமையில் பட்டதாரி மாணவர்கள் 87 பேர் மற்றும் விரிவுரையாளர் குழுவினர் இராணுவ உபகரணங்கள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் (13) ஆம் திகதி திங்கட் கிழமை இலங்கை இலோசாயுத காலாட்படைத் தலைமையகத்திற்கு வருகையை மேற்கொண்டனர்.

வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை இலேசாயுத காலாட் படையணியின் பிரதிப் படைத்தளபதி பிரிகேடியர் எம்.எம் கித்சிறி அவர்கள் வரவேற்றார்.

இலேசாயுத காலாட் படையணியின் நிறைவேற்று அதிகாரியான மேஜர் இந்திக ஹேவாபதிரன அவர்கள் இராணுவ உபகரணம் தொடர்பான விளக்கத்தை இந்த குழுவினருக்கு விளக்கினார்.

|