இராணுவ பொது மன்னிப்பு காலத்தினுள் சிறந்த முன்னேற்றம்
6th November 2017
(ஊடக அறிக்கை)
இலங்கை இராணுவத்தில் விடுமுறையின்றி சேவைக்கு செல்லாமல் இருக்கும் படையினருக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இராணுவ பொது மன்னிப்பு காலம் வழங்கியிருந்தது. 24 நாட்களில் சாத்தியமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த வகையில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் 5412 பேர் சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகுவதற்கு தங்களது படையணி தலைமையகங்களுக்கு சென்றுள்ளார்கள்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படை வீரர்களில் அதிகாரிகள் ஆறு பேரும, கெடெற் அதிகாரிகள் 6 பேரும் 5400 படை வீரர்களும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் சட்ட ரீதியான முறையில் வந்து விலகிச்சென்றுள்ளனர்.
இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பொது மன்னிப்பு காலம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. (முடிவு)
|