இராணுவ (INFOTEL ) கண்காட்சி கூடாரத்திற்கு பரிசு
6th November 2017
2017 ஆம் ஆண்டிற்கான தேசிய தகவல் தொழில் நுட்ப (INFOTEL) கண்காட்சி (04) ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு ஹில்டன் வீட்டு தொகுதியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணியினால் நிர்மானிக்கப்பட்ட இராணுவ கண்காட்சி கூடாரத்திற்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த கண்காட்சி கூடாரம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த கண்காட்சியை பெறும்பாலான பார்வையாளர்கள் பார்த்து ரசித்ததை முன்னிட்டு இந்த கண்காட்சிக்கு சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றது.
இராணுவத்தினால் முன் வைக்கப்பட்ட உலகளாவிய தலைமை அமைப்பு> வாழ்க்கை தொழில் நுட்ப அமைப்பு> தொலை ரேடியோ கட்டுப்பாட்டு அமைப்பு> கண்காட்சிகள் பார்வையாளர்களின் உள்ளத்தை கவர்ந்த விடயமாக அமைந்திருந்தது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர் இலங்கை தகவல் தொழில் நுட்ப தொழில் சங்கம் மற்றும் மின்சார தொலைத் தொடர்பு மற்றும் டஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு இணைந்து இந்த கண்காட்சிகளை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மின்சார தொலைத் தொடர்பு மற்றும் டஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த தேசபிரிய வருகை தந்தார்.
|