பொலன்னறுவை மாவட்டச் செயலாளரைச் சந்தித்த இராணுவத் தளபதி

28th October 2017

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பொலன்னறுவை மாவட்டச் செயலாளரைச் கடந்த வெள்ளிக் கிழமை (27) மதியம் சந்தித்தார்.

அந்த வகையில் பிபிதெமு எனும் பெலன்னறுவை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தைப் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது.

மேலும் இவ் விடயம் தொடர்பான விரிவான விளக்கத்தை இவ் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் விளக்கிக் கூறியதோடு இத் திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பையும் இராணுவத் தளபதியவர்கள் வழங்கிவைப்பதாகக் கூறினார்.

அத்துடன் இத் திட்டத்திற்கான சில ஆலோசனைகளையும் தளபதியவர்கள் எடுத்துக் கூறினார்.

இத் திட்டங்கள் எதிர்வருடம் ஆண்டில் நிறைவு பெறவுள்ளது.

மேலும் பிபிதெமு பொலன்னறுவை எனும் மாவட்ட அபிவிருத்தித் திட்டமானது கௌரவமிக்க மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சிய வசக துர தகின்ன பஸ் வசக திக ஹெரும (இவ் ஐ வருட திட்டத்தில் பல நுhற்றாண்டின் பயன்) எனும் என்னக்கருவில் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் இத் திட்டத்தின் கீழ் சாலை அபிவிருத்தி ,விவசாயம் , கல்வி , சுகாதாரம் , சுற்றச் சூழல் , மின்சாரம் , தொழில்நுட்பம் , பொருளாதாரம் , வீடமைப்பு நிர்மானங்கள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடங்குகின்றன.

இத் திட்டத்தின் ஓர் அங்கமாக அன்மையில் அரலகங்வில பாடசாலைக்கான புதிய வகுப்பரையொன்றை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிகளான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க , மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மற்றும் அரச ஊழியர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

|