சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த இராணுவத்தினர்
26th October 2017
முதன் முறையாக இராணுவத்தின் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் இராணுவ தலைமையகத்தின் பயிற்றுவிப்பு பணியகத்தினால் 10 மாத கால இப் பட்டப் படிப்பு ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
அக்குனஸ் பல்கலைக் கழகத்தில், கொழும்பு -8 இல் இப் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர்களில் இரு இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக 30 இராணுவத்தினர் உள்ளடங்குகின்றனர்.
இப் பட்டமளிப்பு விழாவானது இராணுவத்தின் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் இரோஷ் வணிகசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
|