மித்திர சக்தி கூட்டுப் பயிற்சிகள் முடிவு
26th October 2017
இந்திய இலங்கை இராணுவப் படையினருக்கிடையிலான 2017ஆம் ஆண்டிற்காக 14 நாள் (ஒக்டோபர் 13-36 வரை) இடம் பெற்ற மித்தி சக்திக் கூட்டுப் பயிற்ச்சியானது கடந்த வியாழக் கிழமை (26) நிறைவடைந்தது.
இந்தியாவின் புனேயிலுள்ள ஆவுந்த் இராணுவத் தலைமையக்தில் இடம் பெற்ற இப் பயிற்ச்சிகள் இந்திய இலங்கை இராணுவப் படையினருக்கிடையிலான இராணவ நடவடிக்கைகள் ,நவீன மற்றும் ஆயத தொழில் நுட்பங்கள் பற்றியதோர் விளக்கத்தை அளிப்பதாகக் காணப்பட்டது.
இப் பயிற்ச்சிகளானது எதிர்க் கிளச்சி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.
இந்திய இராணுவத்தின் காலாட் படையணியினரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப் பயிற்ச்சிகளில் இந்திய இராணுவத்தின் ஆயதப் பயிற்ச்சிகள் மற்றும் திட்டமிடல் ஹெலிகொப்டிரின் மூலம் படையினர் கயிற்றின் வழியாக இறங்குதல் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளல் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்ச்சியில் மற்றும் தீவிரவாத நடவடிக்கைப் பயிற்சிகள் போன்ற பல பயிற்ச்சிகளை உள்ளடங்கியதாக காணப்படுகிறது.
மேலும் கடந்த வியாழக் கிழமை (26)இந்திய இராணுவத்தின் 1ஆவது மஹர் தலைமையக மற்றும் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியினர் இணைந்து ஆவுந்த இராணுவத் தலைமையக்தில் அணிவகுப்பு மரியாதையை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இந் நிகழ்வில் இந்திய புனேயிலுள்ள 330ஆவது காலாட் படையணித் தலைமையகத்தின் தளபதியான ஆலேக் சந்திர அவர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நவீன மயப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றின் காரணமாக தீவிரவாதத்தை எதிர்ப்பது மிகவும் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. அதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்குமிடையிலான நடவடிக்கைகளை நாம் மேம்படுத்தல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இப் பயிற்ச்சிகளின்இலங்கை இராணுவ கண்காணிப்பாளரான பிரிகேடியர் அஜித் பல்லவெல்ல அவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் இவ்விரு நாடுகளுக்கிடையிலான நல்லுhரவை மேம்படுத்துவதாகவும் கூறினார்.
|