யாழ் இராணுவத்தினரால் புதிய வீட்டு கட்டிட நிர்மானிப்பு ஆரம்பம்
25th October 2017
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய விவகார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் காரைநகர் கீரிமலை பிரதேசத்தில் ஆறு வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பமானது.
இந்த வீட்டுத் திட்டத்திற்கான வேலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த வீட்டு நிர்மானிப்புகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
சிறைச்சாலைகள் மறசீரமைப்பு புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய விவகார அமைச்சின் அமைச்சர் சுவாமிநாதன் ,யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் அடிக்கல்களை நாட்டி கட்டிட நிர்மானிப்பு பணிகளை ஆரம்பித்தனர். இந்த வீட்டு வேலைத் திட்டங்கள் மூன்று மாத காலத்தினுள் முடிப்பதற்கு பாதுகாப்பு படையினர்கள் தீர்மானித்துள்ளனர்.
|