புளத்சிங்க பிரதேசத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவம்

28th May 2017

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர் 15 பீ.டி.ஆர் அனர்த்த மீட்பு வாகனம் மற்றும் 30 இராணுவ படகுகளில் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த மீட்பு பணிகளுக்கு இராணுவத்தில் 1600 மேலான படைவீரர்கள் ஈடுபட்டதுடன் மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்களது கண்காணிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தினால் இந்த பிரதேசத்திற்கு மருத்துவ சேவையின் நிமித்தம் 5 குழுக்கள் அனுப்பப்பட்டு இப்பிரதேசத்தில் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

இராணுவ தளபதி இந்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று இராணுவத்தினருடன் உறையாடி சிறந்த அறிவுறுத்தல்களை வழங்கி இராணுவத்தினரை உற்சாகப்படுத்தினார். 24 மணித்தியாலயம் நடைபெற்ற இந்த மீட்பு பணிகளில் இராணுவத்தினர் 2600 க்கு அதிகமான பொதுமக்களை மீட்டதுடன் களவானை மற்றும் பிடபெதர பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு விபத்தில் பாதிப்புக்கு உள்ளான 3600 பேருக்கு இராணுவத்தினரால் உணவுகள் வழங்கப்பட்டது.

மேலும் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு உங்களது அனர்த்த சேவையின் நிமித்தம் இராணுவம் இணைந்துள்ளது.

0766907206

0766907125

0112674535

0112674502

|