சார்க்க கெடெட் அதிகாரிகள் இராணுவத் தளபதியைச் சந்திப்பு
21st October 2017
பங்களாதேஷ் ,இந்தியா ,மாலைதீவு ,நேபாளம் ,மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் 79 கெடெட் அதிகாரிகளை முன்னிலைப் படுத்தி சார்க் இனைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
அந்த வகையில் மேற்படி நாடுகளைக் கொண்ட ஆண் பெண் உள்ளடங்கிய 19 உயர் அதிகாரிகள் மற்றும் 60 ஆண் பெண் கெடெட் அதிகாரிகள் ரண் தபயிலுள்ள தேசிய கெடெட் படையணித் தலைமையகத்தில் ஹேர்மன் லொஸ் விருதில் பங்கேற்ற கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.
இதன் போது இப் பிரதிநிதிகள் மற்றும் இராணுவத் தளபதியிடையே நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டது.
|