இராணுவத்தில் அனுமதியின்றி விலகியவர்களுக்கான பொது மன்னிப்பு வழங்கள்

19th October 2017

கௌரவமிக்க ஜனாதிபதியவர்களின் அனுமதியோடு முப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி போன்ரோர் இராணுவத்திலிருந்து சட்ட ரீதியற்ற முறையில் விலகியவர்களுக்கு சட்டபூர்வமாக மன்னிப்பு வழங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில்ே வியாழக் கிழமை (19) பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதோடு இச் சந்திப்பானது இராணுவ ஆளனி நிறுவாகப் பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுதத் பொரேரா அவர்களின் தலைமையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின , ஒழுக்கசார் மார்ஷல் பிரிகேடியர் டீ கே ஜி டீ சிறிசேன , ஊதிய ஆவணப் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் லெஸ்லி விஜேசுந்தர , சட்டப் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் எட்வேட் ஜயசிங்க மற்றும் இராணுவ மேலதிக செயலாளர் பிரிகேடியர் சாந்த ஈஸ்வரன் போன்ரோரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் 68ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நொவெம்பர் 15ஆம் திகதி வரை சட்டபூர்வமற்ற வகையில் சேவையைக் கைவிட்டவர்கள் தமக்குறிய படைத் தலைமையகங்களிற்கு சென்று மேற்படிக் காலப் பகுதியில் சட்ட பூர்வமாக விலகமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சட்டம் இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையினருக்கு அமுலுக்கு உட்படுத்தப்படவில்லை.

இவை தொடர்பான தௌிவான விளக்கத்தை மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் தெரிவித்தார்.

|