யாழ் இராணுவப் படையினர் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு

19th October 2017

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 552ஆவது படைப் பிரிவினரால் மீண்டுமோர் சமூக சேவைப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கடந்த செவ்வாயக் கிழமை (17) யாழ் ஐயகச்சியிலுள்ள 552ஆவது படைப் பிரிவில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்கள் இவ்வாறான செயற்க்கை உடல் பாகங்களை வழங்கி வைத்தார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக் கிணங்க 55ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த குணரத்தின அவர்களின் பங்களிப்போடு இத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வசந்த வைத்தியரத்தின அவர்களின் ஒருங்கிணைப்போடு கிட்டத் தட்ட 8இலட்சம் ருபா பெறுமதியிலான 25 செயற்க்கைக் கால்களையும் ஒரு செயற்க்கைக் கையையும் 23 அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் இதற்கான அனுசரனையை கண்டி குண்டசாலையின் ஊனமுன்றௌர் மையத்தின் திரு சிசிர அத்தநாயக்க அவர்கள் வழங்கினார்.

|