இராணுவத்தினரின் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சி

19th October 2017

இலங்கை இராணுவத்தினர் பங்கேற்கும் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியானது கடந்த ஐந்து தினங்களாக இந்தியாவில் இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.

அந்த வகையில் இந்தியாவின் புனே நகரின் தெற்கு இராணுவ தலைமையகத்தில் இடம் பெறும் இக் கூட்டுப் பயிற்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (15) இராணுவப் படையினர் தமது பயிற்ச்சிகளுக்காக கலந்து கொண்டனர்.

இந்திய இராணுவத்தின் காலாட் படையணியினரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப் பயிற்ச்சிகளில் இந்திய இராணுவத்தின்ஆயதப் பயிற்ச்சிகள் மற்றும் திட்டமிடல் போன்றவற்றை கற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

மேலும் கடந்த 6ஆம் திகதி (திங்கட் கிழமை) இப் படையினர் காட்டிற்கு சென்று பல பயிற்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுப் பயிற்ச்சியில் வைக்கப்பட்ட 16 இலங்குகளில் இலங்கை இராணுவப் படையினர் இலக்குகளிற்கேற்ப சூடுதலை மேற்கொண்டு வெற்றியீட்டினர்.

அதேவேளை இப் பயிற்ச்சிகளில் காலை வேளைகளில் விரிவுரைகள் , கண்காணிப்பு பயிற்ச்சிகள் மற்றும் பலவேறுபட்ட அணிவகுப்பு பயிற்ச்சிகள் போன்றன இடம் பெற்றன.

மேலும் கடந்த செவ்வாய்க் கிழமை (17) இடம் பெற்ற இக் கூட்டுப் பயிற்ச்சியில் ஹெலி சில்டிங் உடற்பயிற்சிகளும் இடம் பெற்றன.

அன்றய தினமே மாலை வேளை இந்திய இராணுவத்தினரால் விரிவுரைகளும் இடம் பெற்றன.

இதன் போது இப் பயிச்சிகளில் ஹெலிகொப்டிரின் மூலம் படையினர் கயிற்றின் வழியாக இறங்குதல் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளல் போன்றனவும் இடம் பெற்றதுடன் இதற்கான உதவிகளை இந்திய இராணுவத்தினர் வழங்கினர்.

|