2017 ஆம் ஆண்டிற்கான டெக்னோ ஸ்ரீலங்காவினால் முன்வைக்கப்பட்ட கண்காட்சிகள்
17th October 2017
இந்த கண்காட்சியில் இலங்கை இராணுவத்தின் படைக்கலச் சிறப்பணி, பொறியியராளர் படையணி, சமிக்ஞை படையணி , கமாண்டோ படையணி, விஷேட படையணி மற்றும் மகளீர் படையணியினர் இந்த கண்காட்சியில் இணைந்திருந்தனர்.
இந்த மெகா கண்காட்சிகள் இராணுவத்தினரது பங்களிப்புடன் இராணுவ வீரர்கள் கண்டு பிடித்த எட்டு புதிய கண்டுபிடிப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஆயுதங்கள், இராணுவ இயந்திரங்கள் மற்றும் தொடர்பு சாதனங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இலங்கை இராணுவத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி பகுப்பாய்வூ திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் மேற்பார்வையில் இராணுவ ஆளனி நிர்வாகம் பணியகத்தின் ஒத்துழைப்புடன் இந்த கணகாட்சிகள் இடம்பெற்றன.
2017 ஆம் ஆண்டிற்கான டெக்னோ ஸ்ரீலங்கா தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி (13) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தொடக்கம் (15) ஆம் திகதி வரை ஞாயிற்றுக் கிழமை பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
|