முப்படையினர் இணைந்து அனர்த்த பணிகளில்
26th May 2017
அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை 300 க்கு மேற்பட்ட முப்படையினர்; கூட்டாக இணைந்து வீரக்கெட்டிய, நெழுவ, மொரவக, தெய்யந்தர, பாதுக்க, புளத்சிங்கள, கலவான, வெல்லம்பிடிய, பாலிந்தநுவர மற்றும் பெலியத்த பிரதேசங்களில் இந்த அனர்த்த உதவி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் 72 மணித்தியாலயத்தினுள் ஏற்பட்ட பாரிய மழை வெள்ளப் பெருக்கத்தின்; நிமித்தம்; இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அதபத்து இணைந்து இந்த அனர்த்த பணிகளுக்கு தலைமை வகிக்கின்றனர். அத்துடன் கடற்படையினரது படகு மற்றும் விமானப்படையினரது ஹெலிக்கொப்டர் சேவையும் இந்த பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கீழ் காணப்படும் பிரதேசங்களில் இந்த அனர்த்த பணிகளுக்கு இணைந்துள்ள இராணவத்தினரது தொகை கீழ்வருமாறு
வீரக்கெட்டிய - 21
பாதுக்க - 22
நெலுவ - 32
புளத்சிங்க - 85
மொரவக - 21
தெய்யந்தர - 16
மேலும் களுகங்கை மற்றும் கிங்கங்கையின் நீர் மட்டம் உயர்ச்சி அதிகரித்திருப்பதாகவும் ,மண்சரிவுக்கு பாதிப்புக்கு உள்ளாகவுள்ள பிரதேசத்திலிருக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படும்படி அனர்த்த மத்திய நிலையத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
|