இரணபாலை பாடசாலை மதில்கள் இராணுவத்தினரால் நிர்மானிப்பு
16th October 2017
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இரணபாலை ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலய பாடசாலை மதில்கள் அமைத்து பாடசாலை நிர்வாகத்திற்கு (09) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவத்தினர் பாரமளித்தனர்.
பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கமைய 68, 682 படைத் தலைமையகத்தின் அனுசரனையுடன் 300 அடி நீளம் 6 அடி உயரத்தில் பாடசாலை மதில்கள் நிர்மானிக்கப்பட்டு இந்த மதில்கள் அமைப்பதற்காக கல்வி அமைச்சினால் 3 லட்சம் நிதி அளிக்கப்பட்டு கட்டிட பணிகள் அனைத்துமே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந் நிகழ்விற்கு 682 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் டி.ஜி ஹேவகே , பாடசாலை ஆசரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலை நிர்வாக அதிகாரிகள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|