மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி இந்தியாவில்
16th October 2017
இலங்கை இந்திய இராணுவத்தினருக்கான மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இந்தியாவிலுள்ள புன்னே காலாட்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது இலங்கை இந்திய நாடுகளுக்கான கொடிகள் ஏந்திய வண்ணம் இந்திய இலங்கை இராணுவத்தினர் அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த பயிற்சிகளில் இலங்கை இராணுவத்தின் கட்டளை வகிக்கும் தளபதியாக பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்கள் சென்றிருந்தார். இங்கு நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் போது இந்த அணிவகுப்புகளுக்கு கட்டளை வகிக்கும் அதிகாரியாக மேஜர் ஜகத் பல்லேகும்புர நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்திய படைகளுக்கான கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் அலொக் சந்திர நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் இந்த பயிற்சிகள் முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன இந்த பயிற்சி ஆரம்பத்தின் போது இலங்கை , இந்திய நாட்டு கொடிகளை பரக்கவிட்டப்பட்ட படி ஹெலிக்கொப்டர்களில் படையினர் உலா வந்தனர். அதனை தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் அஜித் பல்லேவல படையினர்களுக்கான உரையை ஆற்றினார்.
மேலும் இந்திய இராணுவ குருகாஷ் படையினரால் குக்ரி நடனம் இந்த பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இலங்கை இராணுவத்தினால் வெஷ் கண்டி நடனம் இடம்பெற்றது. இறுதியில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் அனைவரது பங்களிப்புடன் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
|