கஜபா படையணியின் வருடாந்த நினைவு தின நிகழ்வு
14th October 2017
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணி போர்களில் பங்கு பற்றி சிறந்த முன்னேற்றத்தை பெற்ற படையணியாகும். இந்த படையணி தனது 34 ஆவது ஆண்டு பூர்த்தி விழா கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் அநுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் 14 ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். அவரை கஜபா படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் ஜி.ஜி.பி பீரிஸ் அவர்கள் வரவேற்று இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து முதலாவது நிகழ்வாக கஜபா படையணி தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ நினைவு துாபி அமைந்திருக்கும் வளாகத்தினுள் எமது நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களது நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் சமய ஆசீர்வாத அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இராணுவத்தினரது 238 குடும்ப அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக கஜபா படையணியின் ட்ரம்பட் ஓசை நாதம் ஒலித்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கஜபா படையணி 1983 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி லெப்டினன்ட் கேர்ணல் விஜய விமலரத்னவின் தலைமையில் முதலாவது படையணி ரஜரட மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் 700 அதிகாரிகள் மற்றும் 15,000 படை வீரர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
|