பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இராணுவ தின கொண்டாட்டங்கள்
14th October 2017
68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷயந்த ராஜகுரு அவர்களின் எண்ணக் கருவிற்கமைய ஒக்டோபர் மாதம் 7 – 10 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வற்றாப்பளை பிரதான வீதிகளில் படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து ஒக்டோபர் 10 ஆம் திகதி இராணுவ நினைவு தின நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி இராணுவ மற்றும் தேசிய கீதத்துடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மர நடு நிகழ்வு தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்று அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் தேநீர் பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இறுதியில் அன்றைய தினம் பௌத்த சமய ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் 50 பேரது பங்களிப்புடன் வெலிகந்த வைத்தியசாலையில் ஒன்பதாம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்பு ஒக்டோபர் 10 ஆம் திகதி கிழக்கு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது நிர்வாக பிரதானியின் தலைமையில் தேசிய மற்றும் இராணுவ கொடிகளை ஏற்றி இராணுவ தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
|