இராணுவ தினத்தை முன்னிட்டு படை வீரருக்கு புதிய வீடு வழங்கி வைப்பு
12th October 2017
இராணுவ நலன்புரி திட்டத்தின் இன்னொரு கட்டமாக சாலியவெவ இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் இராணுவ தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கஸ்ட்டத்தின் மத்தியில் வீடில்லாமல் வாழ்ந்து வரும் படை வீரர் ஒருவருக்கு ராஜாங்கனய பிரதேசத்தில் வீடொன்று நிர்மானித்து வழங்கப்பட்டது.
11 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த இந்த படை வீரர் தனது மனைவிக்கு சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகி இவரது வைத்திய செலவிற்கு கூடுதலான செலவுகளை செய்து கஸ்ட்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
இவரது இந்த நிலையை கவனத்தில் கொண்டு இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரகேடியர் ரன்துல ஹத்னாஹொட அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியுடன் இந்த நிர்மான பணிகளை தொழில் பயிற்சி முகாமில் உள்ள பொறியியலாளர் மற்றும் தொழில் நுட்ப திறமையைக் கொண்ட படை வீரர்களினால் நிர்மானிக்கப்பட்டு இந்த படை வீரருக்கு வழங்கப்பட்டது.
|