இலங்கை இந்தியாவிற்கு இடையிலான இராணுவ கூட்டுப் பயிற்சிகள்

12th October 2017

இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் 10 அதிகாரிகள் மற்றும் 110 படை வீரர்கள் ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டுப் படைப் பயிற்சிக்காக பங்கேற்பதற்காக (11) ஆம் திகதி காலை இந்தியாவிற்கு சென்றனர்.

இந்த கூட்டுப் பயிற்சி இலங்கை இந்தியா இராணுவத்தினருக்கு இடையில் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இந்தியா பூனேயில் அமைந்துள்ள அவுந்தர் இராணுவ முகாமில் இடம்பெறும்.

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினருக்கு இடையில் தகவல்கள் பரிமாற்றம் செய்தல், அன்னியொன்னிய ஒத்துழைப்பு, கூட்டு உபக்கிர நடவடிக்கையை மேற்கொள்ளுதல், இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற விடயங்களை உள்ளிட்டு 2012 ஆம் ஆண்டு இந்த பயிற்சி முதல் தடைவையாக இடம்பெற்றது.

இந்ந கூட்டுப் பயிற்சி அப்பியாசத்திற்கு இலங்கை இராணுவ குழுவிற்கு தலைமை அதிகாரியாக பிரிகேடியர் அஜித் பல்லாவலவும் இவருடன் பிரதி தலைமை அதிகாரிகளாக பிரிகேடியர் விஜித சுபசிங்க, கேர்ணல் என்.சி சோமசிறி மற்றும் கேர்ணல் கே.எம்.சி.எஸ் குமாரசிங்க அவர்கள் பங்கேற்று கொண்டனர். மேலும் இந்த பயிறிசி மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரிகளாக இராணுவ காலாட் பணியகத்தின் பிரதானி மேஜர் ஜெனரல் சாலி கால்லகே மற்றும் இராணுவ அப்பியாச பயிற்சி பிரதி பணிப்பாளர் கேர்ணல் எம்.டப்ள்யூ.ஏ.ஏ விஜேசூரிய ஆகிய அதிகாரிகள் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இந்தியாவிற்கு சென்றனர்.

ஐந்தாவது தடைவையாக இடம்பெறும் இந்த கூட்டுப் பயிற்சியின் போர் அப்பியாச பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அனுபவம் பரிமாறிக் கொள்ளுதல், தந்திரோபாயங்களுக்கு இராணுவ அதிகாரிகளது கண்காணிப்புக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய பயிற்சிகள் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அவுந்தர் இராணுவ முகாமில் இடம்பெறும்.

மேலும் கட்டுரைகள்

|