இராணுவ அங்கவீனமுற்ற படை வீரர்களின் திறமைகள் வெளிப்படுத்தல்
9th October 2017
தேசிய கைவினைச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான கண்காட்சி பண்டாரநாயக சர்வதேச நினைவு மண்டபத்தில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இக் கண்காட்சியில் இராணுவ அங்கவீன படையினர் 43 பேரினால் நிர்மானிக்கப்பட்ட கைத்தொழில் பொருட்கள் இராணுவ நிர்மான கூடத்தில் வைக்கப்பட்டது.
இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு அவர்களின் தொடர்பாடலுடன் இராணுவ ரணவிரு வள மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சி பொருட்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
களிமண், கரும்பு, மூங்கில், பாம்மிரம் மற்றும் கலைப்படைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை மலர்களால் தயாரிக்கப்பட்ட 6 கைவினை பொருட்கள் இந்த கண்காட்சியில் முன் வைக்கப்பட்டன.
இந்த கண்காட்சியில் பங்கு பற்றி முதலாவது இரண்டாவது இடங்களை பெற்ற படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வனசீவராசிகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமின் ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் பாராளுமன்ற மந்திரி ரோசி சேனாநாயக மற்றும் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் திருநாவுக்கரசு அவர்கள் கலந்து கொண்டனர்.
|