வறட்சியால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு குடிநீர் வசதிகள்
3rd October 2017
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கமைய யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிப்புட்டிருந்த நாவற்குலி மற்றும் கோயில்கன்டி பிரதேசத்தைச் சேர்ந்த 10,000 கிராம வாசிகளுக்கு குடி நீர் வசதிகள் (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தரின் உதவியுடன் இப் பிரதேச மக்களுக்கு தெரிவித்து இராணுவத்தினால் இப் பிரதேச வாழ்மக்களுக்கு நீர் டாங்கிகள் மற்றும் பவூசர்கள் மூலம் இந்த நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
|