பாதுகாப்பு பதவி நிலை பிரதானி யாழ் படைத் தளபதியை சந்திப்பு
29th September 2017
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்ன அவர்கள் யாழ் விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை (28) ஆம் திகதி வியாழக் கிழமை பலாலி யாழ் படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
இவ்விருவரது சந்திப்பின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி யாழ் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பாதுகாப்பு பிரதானிக்கு விளக்கினார். பின்பு பாதுகாப்பு பிரதானியின் தலைமையில் முப்படையினரது பங்களிப்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. பின்பு படைத் தளபதிகளுக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் வருகையையிட்டு யாழ் படைத் தலைமையக நினைவு புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.
|