வவுனியாவில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுமக்களுக்காக திறந்து வைப்பு

28th September 2017

வன்னி பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் இராணுவ பொறியியலாளர்கள் சேவை படையினரால் மற்றுமொறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டு 24 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக சுகாதார அமைச்சர் கௌரவத்திற்குரிய ராஜித சேனாரத்ன அவர்கள் கலந்து கொண்டு இந்த சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை திறந்து வைத்தார். மேலும் இந்த கட்டுமான பணிகளுக்கு ஜெனீவா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் நிதி உதவி கிடைக்கப் பெற்றிருந்தது.

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரால் குமுது பெரேரா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 2ஆவது பொறியியலாளர் சேவை படையினரால் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்விற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரால் டபிள்யூஆர்பி சில்வா அவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

|