இந்தியப் பிரதிநிதிகள் இராணுவ பதவிநிலைப் பிரதானியுடனான சந்திப்பு
26th September 2017
இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் கருணாசேகர அவர்களை கடந்த திங்கட் கிழமை (25) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
அந்த வகையில் 15பேர் உள்ளடங்கிய குழுவைக் கொண்ட இந்திய இராணுவப் பிரதிநிதிகள் இலங்கையில் கற்கைநெறிக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் பயிற்ச்சிப் பட்டறைகள் தொடர்பான கலந்துரையாடலை இவர்கள் மேற்கொண்டனர்.
அத்துடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உதவிய இராணுவத் தளபதியவர்களுக்கும் இவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந் நிகழ்வின் இறுதியில் இவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டது.
மேலும் இந்திய அமைதிகாக்கும் நடடிக்கைகளை மேற்கொள்கையில் உயிர் நீத்த இந்திய படையினருக்கான நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் , கடற் படை மற்றும் விமானப் படைத் தளபதிகள் போன்ரோர் கடந்த திங்கட் கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள நினைவுத் துாபிக்குச் சென்றனர்.
|