கூட்டுப் படைப் பயிற்ச்சி நடவடிக்கையின் இறுதிகட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
25th September 2017
2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்ச்சி நடவடிக்கைகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (24) காலை மின்னேரியாவிலுள்ள இராணுவ காலாட் படையணி பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்றது.
கிட்டத்தட்ட மூன்று கிழமைகளாக இடைவிடாது இடம் பெற்ற இப் பயிற்ச்சி நடவடிக்கைகளின் இறுதி நிகழ்வில் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாரத்தின அவர்கள் தலைமை தாங்கியதுடன் இப் பயிற்ச்சி நடவடிக்கைகளின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களும் கலந்து கொண்டார்.
அந்த வகையில் இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலிற்கமைய இடம் பெற்ற இப் பயிற்ச்சி நடவடிக்கைகளில் கிட்டத் தட்ட முப்படையைச் சேர்ந்த மற்றும் 13 நாடுகளை முன்னிலைப் படுத்தி 69 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அத்தோடு இப் பயிற்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கையாக 2108 இராணுவ படையினர் , 370 கடற் படையினர் மற்றும் 197 விமானப் படையினர் மற்றம் 69 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
|