2017ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆக்கப்பாட்டு கண்காட்ச்சி வன்னியில் ஆரம்பம்

25th September 2017

2017ஆம் ஆண்டிற்கான இராணுவ இனோவேடா கண்காட்ச்சி இம் மாதம் 23 – 24ஆம் திகதிகளில் வவுணியா தேசியக் கல்லுாரியில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

வட மத்திய மாகணத்தின் 21, 54, 56, 61, 62 போன்ற படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினரால் தமது திறமைகளை வெளிக் காட்டும் விதத்தில் இக் கண்காட்ச்சி இடம் பெற்றது.

இக் கண்காட்சியானது வன்னி;த தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் 21ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் பங்களிப்போடும் இடம் பெற்றது.

இக் கண்காட்சியில் கிட்டத் தட்ட 40 பகுதிகளில் பலவாறான பயனுள்ள ஆக்கப்பாட்டுப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டது.

இதில் திறமையான ஆக்கப்பாட்டு நிர்மானிப்பாளர்களை தேர்தெடுக்கும் நோக்கில் யாழ்பான பல்கலைக் கழகத்தின் இரசாயனவியல் பிரிவின் உயர் விரிவுரையாளரான திரு பி ஐங்கரன் மற்றும் உணவு மற்றும் போசனையின் உயர் விரிவுரையாளரான திரு மேனக சில்வாகரன் போன்ரோர் பங்கேற்றனர்.

அந்த வகையில் முதலாம் இடத்தை இலங்கை இராணுவத்தின் இலேசாயுத தொண்டர் படையின் 14ஆவது பிரிவினர் தட்டிச் சென்றதுடன் 2ஆம் இடத்தை பொறியிளலாளர் படையனியின் 14ஆவது பிரிவினர் பெற்றக் கொண்டதுடன் மற்றும் 3ஆம் இடத்தை இலங்கை சிங்கப் படையணி பெற்றுக் கொண்டது.

இக் கண்காட்சி நிகழ்வை வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க 56ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான திஸ்ஸ நாணயக்கார அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் வடக்கின் கண்காணிப்பு தளபதியான பிதிகேடியர்கள் , மேற்று படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் . முப்படையினர், வவுணியா லயக் கல்வி மாணவர்கள் போன்ரோர் இக் கண்காட்சியைப் பார்வையிட சமூகமளித்தனர்.

|