அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு தம்பதிவ யாத்திரைக்கு செல்வதற்கான வசதிகள்
23rd September 2017
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மறுவாழ்வு மற்றும் இராணுவ மறுசீரமைப்பின் கீழ் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தினால் தங்கள் வாழ்க்கையில் முதல் தடைவையாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் 10 பேருக்கு இந்தியா தம்பதிவ யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நிறைவேற்று பணிப்பாளர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையின் இந்த அங்கவீனமுற்ற படை வீரர்கள் வைத்தியர் மற்றும் இரண்டு ஆண் தாதிகளின் உதவியுடன் புனித ஸ்தலங்களான போத்கயா,வாரணாசி,குஷினாகர்,நேபாளத்தில் லும்பினி போன்ற இடங்களுக்கு (23) ஆம் திகதி சனிக்கிழமை செல்லவுள்ளனர்.
இந்த சுற்றுலாவிற்கு மிஹிந்த செத் மெதுருவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரியான கேர்ணல் வஜிர காரியவஷம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சுற்றுலாவிற்கு மிஹிந்த செத் மெதுரு மற்றும் ரணவிரு செவன நிலையங்களில் உள்ள இராணுவத்தினர் சேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா மற்றும் நேபாளத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்,இராணுவம் அனைத்து ஏற்பாடுகளையும் சரியான முறையில் இந்த படை வீரர்களுக்கு செய்துள்ளது. இந்த படை வீரர்கள் இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு (30) ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைவார்கள்.
|