5 வது காமன்வெல்த் பவர்-லிவிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்திற்கு பதக்கம்

22nd September 2017

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு பாட்ஷெஃப்ஸ்டரூமில் நடைபெற்ற 5 வது காமன்வெல்த் பவர்-லிவிங் சாம்பியன்ஷிப் 83 கிலோ பிரிவு போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை 8 ஆவது பொறியிலாளர் படையணியின் சாதாரண போர்வீரர் கே.கே.எச் தில்ஹாரா பெற்றுள்ளார்.

இராணுவ தளபதியின் ஆசிர்வாதத்துடன் இவர் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவ படுத்தி இந்த போட்டியில் பங்கு பற்றி பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த சர்வதேச போட்டியில் கலந்து இந்த விளையாட்டு வீரர் பதக்கங்களை பெற்று எமது நாட்டிற்கு கௌரவத்தை பெற்று தந்துள்ளார். இந்த விளையாட்டு வீரருக்கு தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கைக்கான துாதரக அதிகாரிகள் இவரை சந்தித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

|