பாகிஸ்தான் இராணுவ பிரதிநிதிகள் இலங்கை இராணுவ பதவிநிலை பிரதானியை சந்திப்பு
22nd September 2017
பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு படையினர்களுக்கான நான்காவது தடவை இடம்பெறும் பேச்சுவார்த்தை நிமித்தம் (21) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களை நேற்றைய தினம் (21) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான, பிரிகேடியர் சையத் இம்ரான் அக்தர், கேணல் சஜாட் அலி போன்ற உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை கலந்துரையாடினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ பிரதிநிகளுக்கு இந்த வருகையையிட்டு மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் தனது வாழத்துக்களை தெரிவித்தார்.
இந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை கலந்துரையாடல் இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
இந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் பல்வேறு இராணுவ பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.
இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் இந்த சந்திப்பையிட்டு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.
|