ஜனாதிபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரின் பங்களிப்புடன் கூட்டுப்படைப் பயிற்சி குச்சவெளியில்
12th September 2017
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் அழைப்பிற்கேற்ப 2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படைப் பயிற்சிக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றம் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களின் வருகை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சி நிகழ்வு திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் (14) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெறும்.
இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கூட்டுப் படைப் பயிற்சி எட்டாவது தடவையாக இம்முறை இடம்பெறுகின்றது. இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரின் பங்களிப்பில் 13 வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் இப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்த கூட்டுப்படைப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் இந்த பயிற்சிகள் இடம்பெறுகின்றது.
|