2023 கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டியில் ஆண் மற்றும் பெண் இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் சாம்பியன்
21st November 2023
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரோயல் கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில் 2023 நவம்பர் 13-17 இல், இடம் பெற்ற கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி-2023 இல் இராணுவ ஆண் குத்துச்சண்டை வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, 10 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இந்த நிகழ்வில் மொத்தம் 116 ஆண் மற்றும் 45 பெண் விளையாட்டு வீரர்கள் தங்கள் எடைப் பிரிவுகளுக்குள் ஏற்ப கடுமையாகப் போட்டியிட்டதுடன் 17 நாடளாவிய குத்துச்சண்டை கழகங்கள் போட்டிகளில் போட்டியிட்டன.
இந்த போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை இராணுவப் பெண் வீராங்கனைகள் தங்கள் அபார திறமைகளை வெளிப்படுத்தி பெற்றுகொண்டனர்.
இப் போட்டிகளில் இலங்கை பீரங்கிப் படையணியை சேர்ந்த லான்ஸ் பொம்படியர் எச்.எம்.எல்.பீ ஜயவர்தன, போட்டியின் 'சிறந்த குத்துச்சண்டை வீரர்' என்ற பட்டத்தைப் பெற்றுகொண்டார்.
கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டியின் வெற்றியானது பங்கேற்பாளர்களின் வலிமை மற்றும் திறமைகளை கொண்டிருந்தது மட்டுமல்லாமல், இலங்கை குத்துச்சண்டை சமூகத்தில் நீடித்திருக்கும் விளையாட்டுத் திறனையும் உறுதிப்படுத்தியுள்ளது.