படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 ஆரம்பம்

8th November 2023

இராணுவ சிறு ஆயுத சங்கம் மற்றும் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை இணைந்து ஏற்பாடு செய்துள்ள படையணிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 செவ்வாய்கிழமை (நவம்பர் 07) காலை தியத்தலாவ துப்பாக்கிச் சூட்டு திடலில் ஆரம்பமானது.

இப் போட்டியானது நவம்பர் 07 முதல் 16 வரை 10 நாட்களுக்குத் இடம்பெறவுள்ளதுடன் இதில் இராணுவத்தின் 23 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 35 அணிகள் திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவுகளின் கீழ் பங்கேற்கின்றனர்.

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதியும் சிறு ஆயுத சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ. காரியவசம் அவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.