மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பாடசாலைக்கு உதவி
11th September 2017
பாடசாலைக்கு அருகாமையில் அபாயகரமான சூழ்நிலையில் மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் காணப்பட்ட மண்பிட்டியை அவதானித்த பாடசாலை அதிபர் அருகாமையிலுள்ள இராணுவ முகாமிற்கு இது தொடர்பாக தெரிவித்தார்.
பின்பு அந்த இராணுவ முகாமினால் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களுக்கு தெரிவித்ததையிட்டு அவரின் தலைமையில் 58 மற்றும் 583ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 8ஆவது ஹெமுனு காலாட் படையணியின் 21 படை வீரர்களின் பங்கேற்புடன் மண் அனைக்கட்டுகள் அமைத்து பலப்படுத்தி ஏற்படவிருந்த சேதத்தை நிவர்த்தி செய்தனர்.
இரத்தினபுரி சுமனா பாலிகா வித்தியாலய வளாகத்தைச் சுற்றிலும் மலைகள் சூழப்பட்டிருந்தன கடந்த தினங்களில் ஏற்பட்டிருந்த பாரிய மழையின் நிமித்தம் இந்த நிலைமை உருவாகியிருந்தது கடந்த சனிக்கிழமை (9) ஆம் திகதி ஏற்படவிருந்த பாரிய விபத்தை இந்த பாதுகாப்பு படையினரது ஒத்துழைப்புடன் நிவர்த்தி செய்யப்பட்டன.
|