நிலம் நீர் இரண்டிலும் கூட்டுப்படைப் பயிற்சிக்காக ஒருங்கிணைந்த படையினர்
7th September 2017
கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிக்காக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுப்படைப் பயிற்சி VIII- 2017’ திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள குரங்கு பாலம் இராணுவ முகாமுக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகளில் படைப்பிரிவினர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினருக்கு தேவையான போர் இயந்திரங்கள் 2 ஆவது இயந்திர காலாட் படைப்பிரிவினரால் போர்தாங்கிகள் வழங்கப்பட்டன. திட்டமிட்ட இப் பயிற்சிக்காக அதே நேரத்தில் படையினரை நீர் மற்றும் நிலங்களில் பயிற்சி நடவடிக்கைகளை ஈடுபடுத்தினர்.
இப் பயிற்சியானது கடற்படை மற்றும் தரைப்படையினரது பாதுகாப்பு வலயத்தில் இருந்து எதிரியை தாக்கி கடலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி ஆகும்.
இதற்கமைவா, இராணுவ நடவடிக்கை பயிற்சியின் கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் திங்கட் கிழமை 04 ஆம் திகதி அன்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, அவர்களுக்கு தொலைபேசி வீடியோ மூலம் தொடர்பு கொண்டு பயிற்சி சம்பந்தமான விபரங்களை விளக்கினார்.
|