அமெரிக்க பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு
1st September 2017
அவுஸ்திரேலியாவின் அமெரிக்க இராணுவப் பசிபிக் கட்டளை (USAPC) தலைமையகத்தின் வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கிற்கு வருகை தந்தார். மேலும் இவர் (31)ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்த தளபதிகள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. பின்பு பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் நேற்றைய தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள படை வீரர்களது நினைவு துாபி தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
|