பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

1st September 2017

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் டொம் பேன் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை (31) இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.

இதன் போது இவ்விருவருக்குமிடையே தமது கடமைகள் தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பரத் தொடர்பு போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரான பாசீர் நிகொல்சன் அவர்களும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வின் இறுதியில் நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டது.

|