படையினரின் பங்குபற்றலுடன் மாலியில் 74வது இராணுவ ஆண்டு தினம் கொண்டாடம்
15th October 2023
மாலி ஐநா 5 வது இலங்கை அமைதி காக்கும் பணி படையினர் மினுஸ்மா காவோ சூப்பர் முகாமில் 10 ஒக்டோபர் 2023 இடம்பெற்ற 74வது இராணுவ தின கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டனர்.
இராணுவத் தலைமையகம் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் இந்த கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 5வது இலங்கை அமைதி காக்கும் பணி குழுவின் தளபதி கேணல் டபிள்யூ.டபிள்யூ.என்.பீ விக்கிரமாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கொடி ஏற்றிய பின்னர் படையினர் இராணுவ கீதம் இசைத்தனர். பின்னர் இராணுவத் தளபதியின் செய்தியும் கூடியிருந்தோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. மேலும், கலாசார நிகழ்வு மற்றும் அனைத்து நிலையினருக்கான விருந்து வழங்கல் போன்றவை அன்றைய நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்தன.