2017ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் பயிற்சிகள் மின்னேரியாவில்
30th August 2017
2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சிகள் 2675 முப்படை வீரர்களின் பங்களிப்புடனும்62 வெளிநாட்டு இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் இம்முறை கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பயிற்சிகளுக்கான கட்டளை நடவடிக்கைகள் மின்னேரிய இராணுவ தலைமையகத்தில் இருந்து இடம்பெறும்.
இந்த கூட்டுப்படை பயிற்சியில் 2108 இராணுவத்தினரும் , 370 கடற்படையினர் மற்றும் 197 விமானப்படையினரும் கலந்து கொள்வர். மேலும்.
பங்களாதேசம்,இந்தியா,மாலைதீவூ,நேபாளம்,பாகிஸ்தான்,இந்தோனிசியா,மலேசியா. சீனா,ரசியா,அமெரிக்கா,பிரேசில்,சூடான், ஈராக்,இஸ்ரேயல்,ஓமன்,துருக்கி மற்றும் கென்யா போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கு கொள்வர்.
கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர,பிரிகேடியர் நிஷாந்த ஹேரத்,பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா,பிரிகேடியர் உதித பண்டார,கேர்ணல் சந்திர ஜயவீர,கேரணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றது.
இந்த கூட்டுப் பயிற்சிகளின் இறுதி நடவடிக்கைகள் திருக்கோணமலையில் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெறும்.
|