ஐநா பணிநிலை அதிகாரி பயிற்சி பாடநெறி எண்-2 சான்றிதழ் வழங்கல்
27th March 2023
ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரி பயிற்சி பாடநெறி எண்-2 சான்றிதழ் வழங்கும் விழா மார்ச் 22 அன்று இலங்கை அமைதி காக்கும் ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைப்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பயிற்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே கலந்து கொண்டார்.
இந்த பாடநெறி மார்ச் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 மார்ச் 22 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் இலங்கை ஆயுதப் படையின் 38 மாணவ அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா, மங்கோலியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவ அதிகாரிகளும் பயின்றனர்.
இலங்கை அமைதிகாக்கும் ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தல்களின்படி உலகளாவிய அமைதி நடவடிக்கை முயற்சிகளின் வழிகாட்டுதலுக்கமைய இப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரிவுரை குழுவில் ஸ்வீடனை சேர்ந்த திரு. பெங்ட் போல்கெசன், டென்மார்க்கை சேர்ந்த திரு. ஜென்ஸ் வின்டர் ஆண்டர்சன், நேபாள இராணுவத்தின் உதவி அதிகாரி பயிற்றுவிப்பாளர் சுஜான்குருங், லெப்டினன் கேணல் எம்.எல்.என்.யு லியனகே, லெப்டினன் கேணல் எம்.ஏ.ஏ.பி பெரேரா, லெப்டினன் கேணல் டி.ஜி.ஈ.எம்.ஆர்.பி. தம்மந்தோட்டை மற்றும் மேஜர் கே.எச்.டி.மென்டிஸ் ஆகியோர் இருந்தனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சிறப்பு பிரதிநிதிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரி லெப்டினன் கமாண்டர் ஷான் ஜின், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.
உலகளாவிய அமைதி நடவடிக்கை முயற்சி என்பது அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இது ஐக்கிய நாடுகள் மற்றும் பிராந்திய அமைதி காக்கும் நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கான சர்வதேச திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நட்பு வெளிநாட்டு நாடுகளின் வலிமை, பயிற்சி மற்றும் அமைதி காக்கும் திறன்களை நீடிப்பதற்கான அமைக்கப்பட்ட பாதுகாப்பு உதவித் திட்டமாகும்.