பாதுகாப்பு கருத்தரங்கை வண்ணமயப்படுத்திய வரவேற்பு நிகழ்வுகள்
30th August 2017
நவீன மயப்படுத்தப்பட்ட தெழில்நுட்பங்களின் ஒத்துழைப்போடு கொழும்பு ஹோட்டல் கிங்ஸ்பேரியில் வரவேற்பு நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை (28) மாலை வேளை இடம் பெற்றது.
அந்த வகையில் இராணுவ திறமை மிக்க கலாச்சார நிகழ்வுக் கலைஞர்களின் பங்களிப்போடு இடம் பெற்ற இந் நிகழ்வானது அனைவரது மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் வரலாற்றுப் பழமைவாய்ந்த பிரதேசங்கள் மற்றும் பௌத்த மதத்தைச் சாரந்த கலாச்சார விடயங்கள் போன்றன இந் நிகழ்வை மேலும் மெருகூட் டியது.
அந்த வகையில் வராலாற்றுப் பழமை வாய்ந்த பலாங்கொடை மானவாய, சிகிரியாவின் புகழ்பெற்ற இதிகாசம் , பௌத்த மதத்தின் அரகத் மஹிந்த மற்றும் போர்த்துக்கீசு, டொச் மற்றும் பிரித்தானியா போன்றவற்றின் கலாச்சார விடயங்களும் இங்கு மதைக் கவரும் விதத்தில் ஆடல் பாடலுடன் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்விற்கு பாதுகாப்புச் செயலாளர், முன்னய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள் , சாம்பியாவின் இராணுவத் தளபதி மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|