ஐந்து வெளிநாட்டு இராணுவபிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

30th August 2017

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட சீனா,மலேசியா,ஓமன்,சவூதி அரேபியா,உக்ரைன் ஆகிய நாடுகளின் இராணுவ பிரதிநிதிகள் ஐவர் இராணுவ தளபதியை (BMICH) மண்டபத்தில் நேற்றைய தினம் (29) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்கள்.

பெய்ஜிங்,சீனா,மலேசிய இராணுவத்தின் கேணல் ஆதி ரிட்ஸன் பின் அப்துல்லா, பிரிட்டீயர் ஒமான் இராணுவத்தின் பாகீத் மசூத் தபூக்,கமாடோர்,காலித் ஆயிட் சவூதி அரேபிய இராணுவத்தின் அல்காட்டானி மற்றும் உக்ரேனிய இராணுவத்தின் கேணல் ஓலே ஹுலாக் ஆகியோர்,இலங்கை இராணுவ தளபதியுடன் இணைந்து இருதரப்பு நலன்களை பற்றியும்,உலக அளவில் பாதுகாப்புப் படைகளின் இராணுவப் பாத்திரத்தின் எதிர்காலத்தையும் பற்றிய கருத்துகளை பரிமாறினர்.

இந்த சந்திப்பின்போது அந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்பின் பாதுகாப்பு கருத்தரங்கை மிகவும் சிறப்பாகப் பேசியதோடு,கல்வி அறிவூட்டும் தராதரங்களாக ஏற்பாடு செய்வதற்காக இலங்கை இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இறுதியில் இராணுவ தளபதியினால் இந்த வெளிநாட்டு இராணுவ பிரதிதிநிதிகள் இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்ததையிட்டு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

|