மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி-36 நிறைவு

9th April 2024

எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி-36 ன் விடுகை அணிவகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் கேடிபீ டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி-36 யை வெற்றிகரமாக நிறைவு செய்த 42 சிப்பாய்களுக்கு 2024 ஏப்ரல் 08 அன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாடநெறியின் சிறந்த மாணவராக 1 வது விஷேட படையணியின் கோப்ரல் ஜே.எச்.கே சில்வா விருது பெற்றார்.

2024 ஜனவரி 16 முதல் 2024 ஏப்ரல் 08 வரை நடத்தப்பட்ட பாடநெறிக்கான பயிற்சித் விதானத்தில் விரிவுரைகள் மற்றும் வெளிப்புறப் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.