இராணுவ தளபதியை பொலிஸ் தலைமையகம் வரவேற்பு
25th August 2017
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (23)ஆம் திகதி பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
பொலிஸ் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியை பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பொலிஸார் வரவேற்றனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது முக்கியமான விடயங்கள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது இராணுவ தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இடையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டது.
|