இராணுவப் படையினர் தீ அணைப்பு சேவையில் ஈடுபாடு
22nd August 2017
ஹோமாகம நகரத்தில் திங்கட்கிழமை (21) பி.ப 1.50 மணியளவில் தனியார் கட்டிடம் (Esoft Building)ஒன்றில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் மேற்கு 14ஆவது படைத்தலைமையகத்தின் 142ஆவது படைத்தலைமையகத்துக்கு கீழ் இயங்கும் 10 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர முயற்ச்சியினால் சில மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டன.
ஹோமாகம பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க தீயணைக்கும் பல வாகனங்கள் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக அவ்விடத்துக்கு வரவலைக்கப்பட்டன. அந்த நேரத்தில் சிரற்ற காலநிலையை பொருட்படுத்தாமல் பரவிய தீயை படையினர் மற்றும் பொலிஸ் தேசிய பாதுகாப்பு படையினரால் தீ அணைக்கப்பட்டன.
இவ்விடத்துக்கு 142 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் சமன்த டி சில்வா,10ஆவது தேசிய பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜானக கலன்சூரிய மற்றும் படையினரோடு தீயணைக்கும் இடத்துக்கு வருகை தந்து தீவிர பங்களிப்பையும் வழங்கினர்.
|