சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் இராணுவத் தளபதியை சந்திப்பு

22nd August 2017

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான செல்வி கிளாரி மெய்ட்ரெட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த திங்கட் கிழமை (21) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் புதியதாக நியமிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் உப தலைவரான திரு சகாரியா மைகா போன்றவரும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டது.

|