விமானப் படைத் தளபதியை சந்தித்த இராணுவத் தளபதி
21st August 2017
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் விமானப் படைத் தலைமையகத்திற்கு கடந்த திங்கட் கிழமை (21) காலை வேளை தமது விஜயத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் இராணுவத் தளபதியவர்கள் தமது கடமைப் பொறுப்பேற்பின் பின்னர் இவ் விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் இத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இலங்கை விமானப் படைத் தலைமையகத்தின் தளபதியான எயார் மார்சல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் கடற் படையினரின் பங்களிப்புடன் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர்.
பின்னர் விமானப் படைத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி மற்றும் விமானப் படைத் தளபதி போன்ரோரிற்கிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது இருவருக்குமிடையிலான தமது சேவைகள் பற்றி கலந்துரையாடியதுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் இத் தலைமையகத்தின் விசேட அதிதிகளுக்கான புத்தகத்தில் தமது கருத்தினை குறிப்பிட்டார்.
|