சேவையிலிருந்து தப்பியோடிய 777 இராணுவத்தினர் கைது

20th August 2017

இலங்கை இராணுவ பொலிஸ் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது விடுமுறைக்கு சென்று சேவைக்கு திரும்பாத இராணுவ அங்கத்தவர்கள் 777 பேர் (18)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினருள் இராணுவ அதிகாரி ஒருவரும் 776 படை வீரர்களும் உள்ளடங்குவார்கள். இந்த சோதளை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று இராணுவ தலைமையகத்தினால் தெரிவிக்கப்படுகின்றது.

|